கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் முப்பெரு விழா

(துசி)

மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் பாடசாலைக்கு மேலைத்தேய தாள வாத்திய கருவிகள் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்கிய மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் அவர்களுக்கு நன்றி நவிலல் மற்றும் இம்மாதம் ஓய்வு பெற இருக்கும் கோட்டை கல்லிவலய அதிகாரி டேவிட் அவர்களுக்கு பிரியாவிடை அளித்தல் போன்றவற்றைக்கொண்ட முப்பெரு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி அருட்சோதி அவர்களின் தலைமையில் இன்று 2013.11.21ம் திகதி காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கோட்டைக்கல்வி அதிகாரி ம. டேவிட் மாகாணசபை உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் டி.சாந்திகுமார் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஜெயதாஸன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர்; கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பாடசாலையில் மேலைத்தேய தாள வாத்திய கருவிகள்(பாண்ட்) கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்கிய மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் இம்மாத இறுதியில் தமது சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள கோட்டைக்கல்வி அதிகாரி டேவிட் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு வாழ்த்துமடலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.