(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை வலய ஆசிரியர் மத்திய நிலைய திறப்பு விழா இடம் பெற்றுது.
இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கௌரவ அதிதியாகவும் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா ஞாபகார்த்தமாக அதிதிகளினால் பாடசாலை வளாகத்தினுள் மரக்கன்டொன்றும் நடப்பட்டன.
இந்த நிகழ்வின் போது கல்முனை வலய பணிமனையின் பிரதி கல்விப்பணிப்பாளர்கள் , கணக்காளர் , உதவி கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர் மத்திய நிலைய உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



