மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை தாரைக்கேணி மகாஜனக்கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இருந்தே இக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தினை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கைக்குண்டு ஒன்று குப்பைக்குள் இருப்பதினைக்கண்டு மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழு தலைவரான ராஜனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.அவர் இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து இன்று காலை கைக்குண்டு அங்கிருந்து அகற்றப்பட்டது.
கடந்த காலத்தில் குறித்த கல்வி நிலையத்துக்கு அருகில் அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகமும் செயற்பட்டுவந்தது.
இந்த நிலையில் கைக்குண்டு தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
