களுவாஞ்சிக்குடியில் இந்திய பெண்ணொருவர் கைது

சுற்றுலா வீசா அனுமதியில் வந்து வீசா விதிமுறைகளை மீறி ஆடை விற்பனையில் ஈடுபட்ட நேற்று இந்திய பெண்ணொருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த இந்திய பெண் கைது செய்யப்பட்டார்.

அவர் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அவரை மிரிஹானவில் உள்ள வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.