கல்முனை மாநகரம் என்பது வெறுமனே ஒரு ஊரையோ அல்லது ஒரு இனத்தையோ பிரதிபலிக்கும் மாநகரம் அல்ல என மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெறிவித்தார்.
இது தமிழ் மற்றும் முஸ்லிம் என 11 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாநகரமாகும். அதிலும் விசேடமாக கல்முனை தொகுதியை முழுமையாக கொண்ட உள்ளுராட்சி மன்றமாக கல்முனை மாநகரம் திகழ்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை மேயர் நிசாம் காரியப்பரிற்கு ஆடை அணிவிற்கும் விழா அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பரம்பரை பரம்பரையாக சக வாழ்வினை வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஓவ்வொரு முஸ்லிம் ஊர்களுக்கும் இடையில் தமிழ் ஊர்களும் அதேபோல் தமிழ் ஊர்களுக்கும் இடையில் முஸ்லிம் ஊர்களும் என ஒன்ரற கலந்து வாழ்கின்றனர்.
அதிலும் குறிப்பாக கல்முனை மாநகரம் என்பது வெறுமனே ஒரு ஊரையோ அல்லது ஒரு இனத்தையோ பிரதிபலிக்கும் மாநகரம் அல்ல. இது தமிழ் முஸ்லிம் என 11 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாநகரமாகும்.அதிலும் விசேடமாக கல்முனை தொகுதியை முழுமையாக ஒரு உள்ளுராட்சி மன்றமாக கல்முனை மாநகரம் திகழ்கின்றது.
1956ஆம் ஆண்டு கால பகுதியில் கல்முனை முதன் முதலாக கல்முனை பட்டின சபை என்றும் கரவாகு வடக்கு கிராமோதைய சபை என்றும் கரவாகு தொற்கு கிராமோதைய சபை என்றும் கரவாகு மேற்கு கிராமோதைய சபை பிரிக்கப்பட்டது.இந்த காலகட்டத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த கேட் முதலியாரே கல்முனை பட்டின சபையின் தவிசாளராக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து செயின் தம்பி லெப்பை, எம்.தம்பிப்பிள்ளை, எம்.சீ.அஹமது, கே.கே.மரைக்கார், ஏ.முகைதீன்பாவா ஆகியோர் கல்முனை பட்டின சபையின் தவிசாளர்களாக இருந்தனர்.இதன்பிறகு 1977ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைவாக தொகுதிவாரி தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு விகிதாசார தேர்தல் முறை உருவாக்கப்பட்டது.
இதன் பிற்பாடு குறித்த நான்கு உள்ளுராட்சி மன்றங்களும் ஒன்றினைக்கப்பட்டு 19 உறுப்பினர்களை உள்ளடக்கியதான கல்முனை பிரதேச சபை தோன்றம் பெற்றது. இருந்தபோது அக்காலத்தில் தேர்தல் இடம்பெறவில்லை. எனினும் 1994ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபைக்கு முதன் முதலாக விகிதாசார முறையில் தேர்தலாக இடம்பெற்றது.
இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களை கைப்பற்றி அதன் தவிசாளராக ஐ.ஏ. ஹமீட் அவர்கள் தெரிவானார்கள். இவர் மூன்று வருடங்கள் தவிசாளராக இருந்தார். பின்னர் உறுப்பினராக இருந்த எஸ்.எச்.அப்துல் ஹமீட் தவிசாளராக நியமிக்கப்பட்டார். 1994ஆம் ஆண்டிற்கு பின்னர் 2002ஆம் ஆண்டு ஆண்டு தரமுயர்த்தப்பட்ட கல்முனை மாநகர சபைக்கு 2006ஆம் ஆண்டே தேர்தலே இடம்பெற்றது.
இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களை கைப்பற்றி மேயரை தனதாக்கிக் கொண்டது. இதனை அடுத்து மேயராக ஏ.ஆர்.அஸ்மீர் முதல் இரு வருடங்களும் பின்னர் எச்.எம்.எம்.ஹரீஸ் இரண்டு வருடங்களும் மேயராக செயற்றப்பட்டனர். இறுதியாக செனட்டர் மசூர் மௌலானாவும் மேயராக சுமார் ஒரு வருடம் செயற்பட்டார்.
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியது. இதனை தொடர்ந்து எழுந்த முதல்வர் சர்ச்சையின் பிற்பாடு சிராஸ் மீராசாஹிப் முதல் இரு வருடங்களுக்கு மேயராக நியமிக்கப்பட்டார். பின்னுள்ள இரண்டு வருடங்களுக்கு சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் கல்முனை பட்டின சபை முதல் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியவற்றின் ஆட்சியில் இதுவரை எந்த தவிசாளரோ அல்லது மேயரோ முழுமையான காலம் பதவியில் இருக்கவில்லை என்பது வரலாறாகின்றது.
இது இவ்வாறு இருக்க அண்மைக் காலங்களில் சில ஊர்களை மூட்டிவிடும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட முற்பட்டனர். இருந்தும் அவர்கள் தோல்வியினையே கண்டுகொண்டனர்.மக்கள் மத்தியில் பொய்யான செய்திகளை பரப்புவதற்கா இன்றைய நவீன ஊடகங்களில் ஒன்றாக இருக்கும் முகநூல் சமூக வலையத்தளத்தினை பெரிதும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய ஊர்களுக்குள் அரசியலுக்கு அப்பால் திருமண உறவு முறை வலுப்பெற்றுக் காணப்படுகின்றது. அரசியல் வரலாறு தொடக்கம் படித்தவர்கள் பாமர மக்கள் வரை பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழமையை கொண்டுள்ளனர்.
இந்த உறவு முறை இரு ஊர்களும் முரண்படுவதில் இருந்து பெரிதும் பாதுகாத்தது என என்னால் உறுதியாக கூறிக்கொள்ள முடியும். இந்த நிலையில் முன்னாள் மேயர் சிராஸ் மாநகர சபை உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனி மனித ஆட்சியினை மேற்கொண்டார். அத்துடன் அவரது ஆட்சியில் வெளிப்படைத் தன்மை காணப்படவில்லை.
இதனாலேயே சில உறுப்பினர்கள் அவரைவிட்டும் தூரமாகி நின்றோம். தற்போதைய மேயர் நிஸாம் காரியப்பர் மாநகர சபை உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி எங்களுடன் கலந்தாலோசனை செய்து தனது பதவிக்காலத்தினை கொண்டுசெல்வார் என நினைக்கின்றேன். அப்படி செய்தால் நிச்சயமாக அவருக்கு பக்கபலமாக இருப்போம்" என்றார்.
.jpg)