நிந்தவூர் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்துள்ள மர்ம மனிதர்ளின் அட்டகாசத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள விழிப்புக்குழுக்களுடன் பொலிசாரும் இணைந்து செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.