சாய்ந்தமருதில் புதிய கல்முனை மாநகர முதல்வர் நியமிக்கப்பட்டதற்கு எதிராக பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன்.
கல்முனை மேயர் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் சாய்ந்தமருதில் இடம் பெற்று வந்த நிலையில் மேயர் பதவியிலிருந்து கலாநிதி சிராஸ் மீராசாஹிபை இராஜினாமா செய்யவைத்து சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு அப்பதவி வழங்கப்பட்டது.
இதன் ஓர் அங்கமாக இன்று கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் பிரதான வீதியில் புதிய மேயருக்கு ஆடை அணிவிக்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் இடம் பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான றவுப் ஹக்கீம் உடப்பட கட்சியின் முக்கயஸ்த்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகைதரவுள்ளனர்.
இந்நிலையில் இன்று சாய்ந்தமருது ஊரின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகக் இருந்தது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
