மட்டக்களப்பு, ஊறணியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஊறணி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது பால் கொண்டு சென்ற பௌச்சரில் மோதுண்டு கொக்குவிலை சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற 19வயது இளைஞன் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த இளைஞன் உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் சம்பத்தின்போது குறித்த இளைஞனுடன் பயணம் செய்த எட்டு வயது சிறுவன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
