கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர கடமையாற்றிவந்தார். இந்த நிலையிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
இடமாற்றம் பெற்றுச்செல்லும் இவருக்கான விசேட அணிவகுப்பு மரியாதை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா சதுக்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த அணிவகுப்பில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் பொலிஸாரினால் பெரும் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.