மட்டக்களப்பு பனை அபிவிருத்தி சபைக்கு அரசாங்க அதிபர் விஜயம்

மட்டக்களப்பு பனை அபிவிருத்தி சபைக்கு விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அங்கு நடைபெற்றுவரும் பனம் நாற்றுமேடை, பனம் பொருள் உற்பத்தி நிலையங்களின் வேலைகளைப் பார்வையிட்டார்.

அத்துடன், விற்பனைக்காகத் தயாராக உள்ள பனம் பொருள் உற்பத்திகள், கைப்பணிப்பொருள்களையும் பார்வையிட்டார்.

அதே நேரம், பனை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்களுடன் அவர்களது தேவைகள், ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்போது பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட இணைப்பாளர் ரி.விஜயன் பனை உற்பத்திகளின் ஒரு தொகுதியினை மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கிவைத்தார்.

இவ்விஜயத்தின் போது, மாவட்ட அரசாங்க அதிபருடன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.