கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவினையொட்டி இந்த இரத்ததான முகாம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக கழகத்தின் தலைவர் அகிலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் பிற்பகல் நான்கு மணி வரை இந்த இரத்ததான முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் கழக தலைவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்தப்பற்றாகுறையை நிவர்த்திசெய்யும் வகையில் நடத்தப்படும் இந்த இரத்ததானமுகாமில் இரத்தம் வழங்கவிரும்புவோர் பங்குபற்றமுடியும் எனவும் அறிவி;க்கப்பட்டுள்ளது.

