மட்டக்களப்பு - வாகனேரி பகுதில் வெடிக்காத கைக்குண்டு மற்றும் மோட்டார் செல் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், சர்வோதய உத்தியோகஸ்தினரால் மிதி வெடி அபாயக் கல்வி விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கும் போது பொது மக்களால் வெடிக்காத கைக்குண்டு மற்றும் மோட்டார் செல்வகை இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து,இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டு இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
சர்வோதய அமைப்பினரால் மிதி வெடி விழிப்புணர்வு கடந்த 2003ம் காலப்பகுதில் இருந்து யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)