சமுர்த்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதய ஆலோசகருமான எம்.நடேசராஜா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கண்டனம் வெளியிட்டுள்ளது.
சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் என்.ரவீந்திரன் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் ஆகியோர் இன்று(22.11.2013)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 14.11.2013 ம் திகதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற திவிநெகும திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்தின்போது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொந்தராத்து வேலைகளில் ஈடுபடுவதாகவும் சமுர்த்தி சிறுகுழுக்களை முறையாக வலுப்படுத்தவில்லை எனவும் வறுமை ஒழிப்பு வீதம் குறைவாக காணப்படுகின்றபோதிலும் இதற்கான பங்களிப்பினை சமுர்த்தி சிறுகுழுக்களால் மேற்கொள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு முறையாக இன்மையும் ஐனவரி மாதம் அமுல்ப்படுத்தப்படவுள்ள திவிநெகும திணைக்களத்தில் சிறு குழுக்களின் செயற்பாடுகள் சட்டமாக்கப்படவுள்ளதால் அதற்கான இறுதி சந்தர்ப்பமே இது எனவும் குறிப்பிட்டார்.
மேற்படி இவரின் கூற்றானது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விசனத்திற்குள்ளாக்கியதுடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பாக பல கூட்டங்களின்போது இவர் இழிவாக பேசி வருதையிட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
2005 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி எனும் சுபீட்ச திட்டமானது சுமார் 15 வருடங்கள் சிறப்பாக செயற்படத்தப்பட்டு வறுமை ஒழிப்பு வீதம் 6.4 வீதமாக காணப்படுவதற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் அயராத சேவையும் ஒரு காரணமாகும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.
அத்துடன் எமது தேசிய சங்கத்தின் உறுப்பினர்களினதும் உயர் அதிகாரிகளினதும் பல்வேறு அர்ப்பணிப்பிற்கும் தியாகத்திற்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
திவிநெகும திட்டம் அமுல் படுத்த இன்னும் சில நாட்கள் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவரின் இக்கூற்றானது பொதுமக்கள்; மத்தியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான பிழையானதொரு எண்ணக்கரு ஒன்றினையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
இவரின் இக் கூற்றை எமது சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் இனிவரும் காலங்களில்; இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்;துவதை தவிர்ந்துகொள்ளுமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அவ்வாறு முறைகேடாக நடந்துகொள்ளும் ஒரு சில உத்தியோகத்தர்களுக்காக ஒட்டு மொத்த அனைத்து உத்தியோகத்தர்களையம் குற்றச்சாட்ட முடியாது என்பதையும் எமது சங்கம் தெரிவிக்க விரும்புகின்றது.
மேற்படி சமுர்த்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதய ஆலோசகருமான எம்.நடேசராஐhவின் மேற்படி கருத்தினை கண்டிப்பதுடன் கவலையையும் தெரிவிக்கின்றோம் என அவ் வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.