(தவக்குமார்)
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் 88 வது அவதார தின விழா மிகவும் சிறப்பாக மண்டூர் பிரேமசாயி மந்தீரில் ஸ்ரீ.என்.லெஸ்லிநிகால் அவர்களின் தலைமையில் 23.11.2013 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இன் நிகழ்வு சுவாமி அவதரித்த நேரமான அதிகாலை 5.06 மணிக்கு விசேட ஆதாரனையுடன் ஆரம்பமானது.
தலைமையுரையினை நிலையத்தலைவர் ஆற்றினார் தொடர்ந்து பிரசாந்தி கொடியேற்றல் அஸ்டோத்திர பஜனை ஆகிய நிகழ்வுகள் ஆரம்ப நிகழ்வாக நடைபெற்றது.
ஆன்மீக சிறப்புரையினை சரஸ்வதி கடாச்சகர் உபந்நியாசர்மணி சிவயோகச் செல்வன் ஸ்ரீ.த.சாம்கசிவசிவாச்சாரியர் அவர்கள் ஆற்றினார்.
அத்தோடு ஆன்மீக உரையினை ஸ்ரீ.டாக்டர் ந.பிரேமதாசன்(சத்தியசாயி மத்திய அறக்கட்டளை உறுப்பினரும் முன்நாள் கிழக்குப்பிராந்திய தலைவர் ஆற்றினார்.
இறுதியாக திருவூஞ்சல் மங்கள ஆரத்தி பிரசாந்திக் கொடி இறக்கம் நடைபெற்றது.பாபாவின் அன்றய அவதார தினத்தினை முன்னிட்டு வறிய குடும்பத்தவர்களுக்கு உடுதுணி வழங்கப்பட்டது.
அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கு இனிப்புப் பண்டம் மற்றும் கற்றல் நடவடிக்கைக்கான உபகரணமும் வழங்கப்பட்டது.வறிய குடும்பத்தவர்களுக்கு மதிய உணவுகளும் வழங்கப்பட்டது.
;.