புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

(லியோன் )  

மட்டக்களப்பு  புனித  சிசிலியா  பெண்கள்  தேசிய  கல்லூரியின்  பழைய  மாணவர்களின் வருடாந்த  ஒன்றுகூடல்  நிகழ்வு   இன்று  24.11.2013 ஞாயிற்று  கிழமை  காலை  10.00மணியளவில்   கல்லூரி  மண்டபத்தில்  மிக  சிறப்பாக நடைபெற்றது .

இந்நிகழ்வுக்கு  பிரதம  விருந்தினராக  வெள்ளிவிழா  நாயகன்  அருட்பணி  ஐ . ஜோசப்  அவர்களும், கல்லூரி  அதிபர்  அருட்சகோதரி  எம் .எலிசபெத் , அருட்சகோதரி   எம் .குளோறேண்ஸ் , மற்றும்  அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் ,  கல்லூரியின்  பழைய  மாணவிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந் நிகழ்வானது  மங்கள  விளக்கேற்றப்பட்டு  திருப்பலியுடன்  ஆரம்பமானது .
இத்  திருப்பலியை  அருட்பணி  ஐ . ஜோசப்  அவர்களால்  ஒப்புக்கொடுக்கப்பட்டது .

இத்  திருப்பலியின்  பின்  பழைய மாணவிகளினால்  தயாரிக்கப்பட்ட  நாடகம் , நடனங்கள் பாடல்கள்  என  பல  சுவாரசியமான  கலை  நிகழ்வுகள்  இடம்பெற்றன .இறுதி  நிகழ்வாக  மதிய  விருந்துபச்சாரத்துடன்    பழைய  மாணவிகளின்  ஒன்றுகூடல்  நிகழ்வு   நிறைவுபெற்றது .