மட்டு.மேற்கு வலய நாவற்காடு நாமகள் வித்தியலய சிறுவர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள நாவற்காடு நாமகள் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் அதிபர் த.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்றன.

அதிதிகளாக மண்முனை மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.கணேஸ், மண்முனை மேற்கு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர் எஸ்.பிரபாகரன், மண்முனை மேற்கு சிறுவர் நன்னடத்தை ஆலோசகர் ரி.சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை 5ஆம் தர மாணவர்களினால் பிறரையும் நேசி என்ற அரங்க அளிக்கை ஒன்றும் Nடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். குறித்த நிகழ்ச்சியினை வித்தியாலய ஆரம்பக் கல்விப் பிரிவு தலைவர் ஏ.சீ.பிரான்சிஸ் மேற்கொண்டிருந்தார்.

இவ் நிகழ்வில், சிறுவர் தினத்தையொட்டிய ஊர்வலம், சிறுவர் நாடகம், பேச்சுக்கள் என்பன அடங்கியிருந்தன.