கல்குடா பிரதான வீதியில் காவல் கடமையில் இருந்த பொலிசார் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் மீது சந்தேகம் கொண்டு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கஞ்சா வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் பின் பிறைந்துருச்சேனை வாழைச்சேனையைச் சேர்ந்த விற்பனையாளர் எனக் கருதப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணைகளின் பின் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
.jpg)