மட்டக்களப்பு மாநகரசபையினால் உள்ளுராட்சி வாரம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு சிரமதான நிகழ்வு பொது நூலக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13.09.2013) இடம்பெற்றது.
கடந்த திங்கள் ஆரம்பமான நிகழ்வுகள் நாளை மறுதினம் ஞாயிறுக்கிழமை ( 15.09.2013) வரை பல்வேறு சமூக நலன் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதுவரையில் சொத்துக்களின் மதிப்பீட்டு வரி செலுத்துவதற்கான நடமாடும் சேவை, மருத்துவ முகாம், மரம் நடல் மற்றும் உயர்தர மாணவர்களிடையேயான கையெழுத்துப்பிரதி எழுதுதல் போட்டி எனபன இடம்பெற்றுள்ளன.
நாளை சனிக்கிழமை ( 15.09.2013) பாலர் பாடசாலை மாணவர்களுக்காக வாசிப்பு, சிறுவர் கதை போட்டிகள் மற்றும் சிறுவர் படக்காட்சி என்பன நடைபெறவுள்ளதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.