கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலாசார நிகழ்வு

யுத்தத்துக்குப் பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் தலைப்பில் நடைபெற்றுவரும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாட்டின் கலாசார நிகழ்வுகள் நேற்றைய தினம் இரவு மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்றது.

இந் நிகழ்வுகளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையும், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வுகளில் இசைக்கச்சேரிகளும், பாரம்பரிய கூத்துக்களும் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

நேற்று வியாழன் ஆரம்பமான கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு இன்றையதினம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்றைய கலாச்சார நிகழ்வுகளில் அதிதிகளாக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, மாநாட்டின் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டுள்ள பங்காளதேசின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமட், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தென்னாசியக் கற்கைகள் துறை இணைப்பாராசிரியர் கலாநிதி ராகுல் முகர்ஜீ, பேராசிரியர் சி.மௌனகுரு, சர்வதேச மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கலாநிதி பி.சிவராஜா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.