இன்று பகல் பெண்னொருவர் வெருகல் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பாய்வதைக்கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் பெண்னை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக வெருகல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணையை வெருகல் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ஆண்மையில் மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்திலும் பெண்னொருவர் தற்கொலைக்கு பாய்ந்த நிலையில் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
