மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மரம் நடும் நிகழ்வு

(சிவம்)

மட்டக்களப்பு மாநகரசபையினால் உள்ளுராட்சி வாரம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு மரம் நடல் நிகழ்வு மாநகரசபையின்  வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13.09.2013) இடம்பெற்றது.

மாநகரசபை ஆணையாளர் எஸ். சிவநாதன், சுற்றாடல் உத்தியோகத்தர் சி. கோகுலன் மற்றும் பாடசாலை மாணவி ஆகியோர் மரங்களை நட்டனர்.

கடந்த திங்கள் ஆரம்பமான உள்ளுராட்சி வாரத்தில் நாளை மறுதினம் ஞாயிறுக்கிழமை ( 15.09.2013) வரை பல்வேறு சமூக நலன் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதுவரையில் சொத்துக்களின் மதிப்பீட்டு வரி செலுத்துவதற்கான நடமாடும் சேவை, மருத்துவ முகாம், மரம் நடல் மற்றும் உயர்தர மாணவர்களிடையேயான கையெழுத்துப்பிரதி எழுதுதல் போட்டி எனபன இடம்பெற்றுள்ளன.

நாளை சனிக்கிழமை ( 15.09.2013) பாலர் பாடசாலை மாணவர்களுக்காக வாசிப்பு, சிறுவர் கதை போட்டிகள் மற்றும் சிறுவர் படக்காட்சி என்பனவும் ரூhயிற்றுக்கிழமை மாநகரசபை ஊழியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக  நடைபெறவுள்ளதாக மாநகரசபை ஆணையாளர் எஸ். சிவநாதன்; தெரிவித்தார்.

மாநகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், நிருவாக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.