மட்டக்களப்பு சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை சிறைக் கைத்திகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமொன்று நடாத்தப்பட்டது.
சிறைக்கைதிகள் நலன் புரி தினத்தையொட்டி இந்த மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் இ.மோகனராஜா மற்றும் சிறைச்சாலை சிரேஷ்ட நலன்புரி உத்தியோகத்தர் எஸ்.சிறினிவாசன் உட்பட சிறைச்சாலை நலன்புரி உத்தயோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலையில் இந்த மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்தியர்களான டாக்டர் எம்.திருக்குமரன், மற்றும் டாக்டர் எஸ்.சோபனா ஆகியோர் இந்த மருத்துவ சிகிச்சை முகாமில் கைதிகளுக்கான மருத்துவ சிகிச்சையை வழங்கினர்.