கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை காலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தலைமையில் ஆரம்பமானது.

நாளை வியாழக்கிழமை வரை இரண்டு சநாட்கள் நடைபெறும், இவ் சர்வதேச மாநாட்டில், ஆரம்ப நிகழ்வில், வரவேற்புரையினை சர்வதேச மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின தலைவர் கலாநிதி பி.சிவராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாநாடு, யுத்தத்துக்குப் பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் தலைப்பில் நடைபெறுகிறது.

இதில், இன்றைய தினம் பிரதம அதிதியாகவும், பிரதம பேச்சாளராகவும் பங்காளதேசின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமட் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தென்னாசியக் கற்கைகள் துறை இணைப்பாராசிரியர் கலாநிதி ராகுல் முகர்ஜீ, ஆகியோரும் கலந்து கொள்கின்றார். அத்துடன், ரஜரட்டை பல்கலைக்கழக விவசாயப்பீட பேராசிரியை அருணி வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர் கலாநிதி ரி.சர்வேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அதே நேரம், இன்றைய நிகழ்வில், நுண்கலைத்துறையினரின் கலாசார வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைவடிவமான களரித் தோரணம் சிறிய வடிவில் அலங்கார நினைவுப் பரிசாக வடிவமைக்கப்பட்டு அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வினையடுத்து ஆய்வுச் சுவரொட்டிக் காட்சிப்படுத்தல்கள் நடைபெற்றன.

6 அமர்வுகளாக நடைபெறும் இவ் மாநாட்டில் 12ஆம் திகதி மாலை மாநாட்டு இரா விருந்தும் கலாசாசர நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரிலுள்ள பாடுமீன் விருந்தினர் விடுதியில் இன்று இரவு நடைபெறுகிறது.

தேசிய அளவில், 2006ஆம் ஆய்வு மாநாடு முதல் தடவையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டிருந்தது. இம்முறை இவ் மாநாடு சர்வதேச அளவில் நடத்தப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.