சைவமும் தமிழும் தழைத்தோங்கும் செட்டிபாளையம் பகுதியில் நீண்ட நெடுங்காலமாக வீரமாகாளியம்மன் அருள்பாலித்துவருகின்றார்.
கடல் ஓசை தலாட்ட கரு நாகம் குடை பிடிக்க வீரமா காளியம்மன் ஆலயம் பன்னெடுங்கால வரலாற்றினையும் அற்புத சக்தியையும் கொண்டுள்ளதுடன் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் கொண்டுள்ளது.
கடந்த 01ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் அம்மனுக்கு பூசைகள் இடம்பெற்றுவந்ததுடன் ஊர்காவல் திருவுலாவும் இடம்பெற்றுவந்து.
நேற்று செவ்வாய்க்கிழமை நோற்பு கட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன் கடற்குளிப்பும் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை அம்மனுக்கு பூசைகள் இடம்பெற்று களையாடும் நிகழ்வு இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து தீக்குளி காவல் செய்யும் நிகழ்வு இடம்பெற்று தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்கடன்களை செலுத்தினர்.
அத்துடன் இதன்போது அடியாகளுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்வு மற்றும் சாட்டை திருப்பலி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.