மத்திய கிழக்கு நாடொன்றில் உற்பத்திசெய்யப்பட்ட நிலையில் சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் 20 வண்டல்களைக்கொண்ட 200 பெட்டிகளை இவ்வாறு மதுவரித்திணைக்களத்தினர் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இந்த போதைப்பொருட்கள் விற்பனைசெய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட அத்தியட்சர் என்.துசாதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா,மதுவரி திணைக்கள பரிசோதகர் டயஸ்,சாஜன் மேஜர் எம்.செல்வக்குமார்,மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.செல்வராசா,எஸ்.ஜெயக்குமார்,கே.ரஜனிக்காந்த ஆகியோர் கொண்ட குழுவினரே இவற்றைக்கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை நீதிமன்றில் சமர்ப்பிதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறான சட்ட விரோத போதைப்பொருட்களை விற்பனைசெய்வோர் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தபோதைப்பொருட்கள் வித்தியாசமான முறையில் பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் இவை சிறுவர்களுக்கு பாதிப்பிiனை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.