தூக்கில் தொங்கிய நிலையில் மட்டு.மத்திய கல்லூரி மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 10கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை குறித்த மாணவனின் வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.