தமிழ் இனத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதோடு ஜனநாயகத்திற்கு புள்ளடியும், சர்வதிகார இராணுவ அடக்குமுறை ஆட்சிக்குப் பொல்லடியும் வழங்கி, எமது தமிழ் இனத்தின் வெற்றியை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார்தெரிவித்துள்ளார்.
நடைபெற இருக்கும் வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது தமிழ்மக்கள் ஒட்டு மொத்தமாக தமிழரின் தேசிய கட்சியான தமிழ் கூட்டமைப்பை அமோக வெற்றியடைய செய்து தமிழ் இனத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதோடு ஜனநாயகத்திற்கு புள்ளடியும், சர்வதிகார இராணுவ அடக்குமுறை ஆட்சிக்குப் பொல்லடியும் வழங்கி, எமது தமிழ் இனத்தின் வெற்றியை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து காட்ட வேண்டும் என வடமகாண தமிழ் பேசும் மக்களை கேட்டு கொள்கிறேன்.
தமிழினத்தின் உரிமைகளை பெற்று கொள்ள தந்தை செல்வாவின் அஹிம்சை வழி அரசியல் காலம் தொடங்கி ஆயுதப் போராட்டக் காலம் வரையும் ஆயிரக்கணக்கான உடன் உறவுகளை இழந்து , பொருளாதாரத்தையுமிழந்து, சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தோம்.
அவற்றினால், அகதிகளாக்கப்பட்ட, தமிழ் இனத்தின் பிரச்சினைகளுக்கு இந்த நாட்டில் மாறி மாறி வந்த சிங்களப் பேரினவாத அரசுகளால் இது வரையும் ஓர் நீதியான தீர்வு வழங்கப் படவில்லை என்பதை உன்னிப்பாக உணர்ந்து கொண்ட சர்வதேச நாடுகள், சிறி லங்கா அரசுக்கு தமிழ் மக்களின் இனபிரச்சனைக்கு தீர்வு ஒன்றை விரைவாக வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வந்தன.
ஆனால்! சிறி லங்கா அரசானது தமிழரின் முக்கிய தீர்வான இனப் பிரச்சினைக்கு, போர் ஓய்ந்து 4 வருடங்களாகியும் இதுவரை எந்தவிதமான ஓர் மாற்று தீர்வினையும் வழங்கவில்லை எனக்கூறும் ஐ. நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளரரான நவினீதம்பிள்ளையவர்களின் பத்திரிகை, ஊடகங்களின் அறிக்கையினை, அரசானது முற்றாக நிராகரித்தது.
அது மல்லாமல், நவிபிள்ளையை புலிகளின் சார்பாகவும் தமிழ் கூட்டமைப்புக்கு சார்பாகவும் பேசுகிறார் என அரசின் அமைச்சர்களும், சிங்கள பேரினவாதம் பேசும் சில கட்சிகளின் தலைவர்களும் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் பேசி வருவதையும், நவிபிள்ளையின் கூற்றுக்கு எதிரான அறிக்கைகளையும் வெளிபடுத்தி வருவதை, வட மாகாண தமிழ் பேசும் மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதை நான் சொல்லி தெரரிந்து கொள்ளத் தேவை இல்லை.
அத்தோடு, தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இனவாதத்தை துண்டுவதாகவும் நாட்டை கூறு போடும் உபாயம் எனவும் அரசும், ஏனைய சிங்களப் பேரினவாத கட்சிகளும் கூறுவதோடு, எமது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயாவை கைது செய்து சிறையிலிட வேண்டும் எனவும், இந்த நாடு முழுவதும் சிங்களவர்க்கே சொந்தமானது என்று, இன்று இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பே, உங்களிடம் அபிவிருத்தி எனும் மாயக் கண்ணாடியை காட்டி, வட மாகாண சபையின் ஆட்சியை அமைக்க தமது வெற்றிலைக்கு புள்ளடி போடுமாறு சர்வாதிகாரப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
இத் தேர்தலில் வட மாகாண மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை, நன்கு அறிந்தும், புரிந்தும் தெளிவோடும் இருக்கின்றீர்கள். எனவே, உங்கள் விலை மதிப்பில்லா வாக்குரிமைகளை, யாருக்கு வழங்க வேண்டும், எவருக்கு புத்தி புகட்ட வேண்டும் என்பதுடன் இன்று இத்தேர்தலை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கும் சர்வ தேச நாடுகளுக்கு தமிழினத்தின் ஏகோபித்த நிலைப்பாட்டை வெளிக்காட்ட எமது தேசிய கட்சியான தமிழ் கூட்டமைப்புக்கே உங்கள் வாக்குகளை வழங்கி மாகாண சபையின் ஆட்சியை அமைக்க உங்கள் அமோக ஆதரவை வழங்கு வீர்கள் என தமிழ் இனத்தின் விடுதலை உணர்வோடு வட மாகாண மக்களிடம் கேட்டு கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.