மண்டூரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

(தவக்குமார்)

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளன குறித்த நபர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்ப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்;டுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

மண்டூர் 3ம் பிரிவைத்சேர்ந்த நடராசா என்பவரே விபத்தில் சிக்கியவர் என இனம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வரும் போது மாட்டுடன் மோதியமையினாலையே இவ் விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை விபத்தில் படுகாயம் அடைந்த நபர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அன்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதியில் அலையும் மாடுகளினால் விபத்துச்சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் மக்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.