தொன்மைகளை அறிந்து அவற்றை ஆவணப்படுத்தவேண்டியது காலத்தின் தேவை -முதுநிலை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா

தொன்மைகளைப் பற்றிய விடயங்களை அறிந்து அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என அமரர் பேதுருப்பிள்ளை உடையார் நினைவுப் பேருரையில் கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வித்தியாலய ஸ்தாபகரான அமரர் பேதுருப்பிள்ளை உடையார் நினைவுப் பேருரையில் கோறளைப் பற்று வடக்கு வாகரைப் பிரதேச கல்விப் பராம்பரியம் எனும் தலைப்பில் உரையாபற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

காலநீட்சி என்பது வரலாற்றுத் தடயங்களை அழிக்கக் கூடியதாகையால் கிடைக்கின்ற தகவல்களை ஆவணப்படுத்துவது வரலாற்றை எழுத முற்படுவோருக்கு ஆதாரமாக அமையக்கூடியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இப்பொழுது எமக்குக் கிடைக்கும் தகவல்கள் இன்னும் சிறிது காலத்தில் கிடைக்காமல் போகக்கூடும் எனவே அனுபவமுடைய முதியோர்களிடம் எமது தொன்மைகளைப் பற்றிய விடயங்களை அறிந்து அவற்றை ஆவணப் படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். என்றார்.


கி.பி. 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் பனிச்சங்கேணியில் நிறுவப்பட்ட வன்னிநாச்சியார் அரசு பற்றியும், அதனைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டில் அப்பிரதேசத்தில் மெதடித்த கத்தோலிக்க மிசனரி மார்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்வி முறமைகள் பற்றியும் அதாரபூர்வமான கருத்துக்களுடன் இவ் நனைவுப் பேருரை ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அக்கால குருகுலக் கல்வி முறையில் பாடசாலை தொடங்கும் போதும் முடியும் போதும் மாணவர்களால் ஆசிரியருக்குக் கூறும் குருவணக்கப்படாலும் இவ் ஆய்வில் முன்வைக்கப்பட்டது.

பாடசாலை ஆரம்பித்து 65 வருடத்தில் இடம் பெற்ற பரிசளிப்பு விழாவும் நினைவுப் பேருரையும் இதுவாகும்.

பாடசாலை அதிபர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்வாகரைப்பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.







இவ் முதலாவது பரிசளிப்பு விழாவில், பாடவிதான, இணைப் பாடவிதானங்களில் சிறந்த மாணவர்கள், கணித வினாவிடை, சமூக விஞ்ஞானப் போட்டி, 5ஆம்ஆண்டு புலமைப்பரிசில் சித்திபெற்ற மாணவர்கள், சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்தோர், விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் என 150 வரையான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.