மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினால் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கல்லூயில் மரநடுகை நிகழ்வு மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், லயன்ஸ் கழக மாவட்டம் 306-C2 இற்கான ஆளுனர், லயன் லசந்;த பெரேரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
அன்றைய தினம் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில், இவ்வாண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதினைப் பெற்ற மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்சுக்கு பாராட்டி லயன்ஸ் கழக மாவட்டம் 306-C2 இற்கான ஆளுனர், லயன் லசந்த பெரேரா நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.

அத்துடன், சுவாமி விபுலானந்தா அழகியற் கல்லூரி மாணவர்களுக்கு நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கு கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின், தாதியர் கற்கைகள் பிரிவுத் தலைவர் வண. சகோதரி கலாநிதி யோசப்பா நடத்தி வைத்தார்.
மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகமானது கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினால் கடந்த வருடம் உருவாக்கப்பட்டு, தற்போது லயன்ஸ் கழக கிழக்கு மாகாண தலைமைத்துவ பயிற்சி இணைப்பாளரும், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி சந்திரா மகேந்திரநாதனின் வழி நடத்தலில் கடந்த ஒரு வருட காலமாக செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன் இப் பெண்கள் லயன்ஸ் கழகமானது போராசிரியர்கள், சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் வைத்திய கரலாநிதிகளையும் அங்கத்தவர்களாகக் கொண்டு சமூக, மேம்பாட்டு வழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில், இவ்வாண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதினைப் பெற்ற மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்சுக்கு பாராட்டி லயன்ஸ் கழக மாவட்டம் 306-C2 இற்கான ஆளுனர், லயன் லசந்த பெரேரா நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.

அத்துடன், சுவாமி விபுலானந்தா அழகியற் கல்லூரி மாணவர்களுக்கு நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கு கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின், தாதியர் கற்கைகள் பிரிவுத் தலைவர் வண. சகோதரி கலாநிதி யோசப்பா நடத்தி வைத்தார். மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகமானது கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினால் கடந்த வருடம் உருவாக்கப்பட்டு, தற்போது லயன்ஸ் கழக கிழக்கு மாகாண தலைமைத்துவ பயிற்சி இணைப்பாளரும், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி சந்திரா மகேந்திரநாதனின் வழி நடத்தலில் கடந்த ஒரு வருட காலமாக செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.