காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றைக் கையாள்வதற்காக நபர் ஒருவரிடமிருந்து இரண்டாயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற வேளையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் முறைப்பாட்டை பதிவுசெய்யும்போதே இவர் இலஞ்சம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி பொலிஸ் சார்ஜன்ற் முறைப்பாட்டாளர்களிடமிருந்து இலஞ்சம் பெறுவதாக ஏற்கெனவே இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
