கல் நந்தி புல்லுண்டு தனுப்போட்டு சாணமிட்டு இந்து மதத்தின் பெருமையை பறைசாற்றி ஆங்கிலேயரை புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவ பெருவிழா இன்று சனிக் கிழமை காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவசிறி மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவ பெருவிழாவானது 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப.4.00மணிக்கு தேரோட்ட பெருவிழாவும் இரவு 7.00மணிக்கு முனைக்காடு வீரபத்திர சுவாமி ஆலய முன்றலில் திருவேட்டைத் திருவிழாவும் இடம் பெறுவதுடன் 23ஆம் திகதி திங்கள்கிழமை காலை 5.00மணிக்கு பெருமானின் தீர்த்தோற்சவமும் இடம் பெறவுள்ளது.