வவுணதீவுப் பிரதேச பெரும்போக விவசாயச் செய்கை ஆரம்பக் கூட்டம்.

(சசி ஜதாட்சன்)

வவுணதீவுப் பிரதேச பெரும்போகச் செய்கை ஆரம்பக் கூட்டம் இன்று மண்முனை மேற்குப் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.
ஆயித்தியமலை மற்றும் மண்டபத்தடிக் கண்டத்துக்குட்பட்ட விவசாயிகள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயச் செய்கையின்; போது தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள்,கமநல சேவை திணைக்கள அதிகாரிகள்,விவசாயத் திணைக்கள அதிகாரிகள்,கால்நடை  அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள்,விவசாயக் காப்புறுதித் திணைக்கள அதிகாரிகள் என விவாசாயத்துடன் தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பேரின்பமலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.