இ;ப்பாத யாத்திiயில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இந்த பாதையாத்திரை இடம் பெற்றது.
வருடா வருடம் இடம்பெறும் இப் பாதயாத்திரை இவ் வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையாவின் பிராத்தனை திருப்பலியினைத் தொடர்ந்து காலை 6மணிக்க பாதயாத்திரை ஆரம்பமாகி வீச்சுக்கல்முனை சந்தணமாதா ஆலயம் வலையிறவுப் பாலம் ஊடாக சென்றது.
இப் பாத யாத்திரையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா மற்றும் எஹெட் கரிட்டாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் உட்படஅருட்தந்தைமார் மற்றும் கிறிஸ்தவ வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
விசேட சொரூபமும் இதன் போது கொண்ட செல்லப்பட்டது. கடந்த 30ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான 59வருட ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை 8ஆம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்று இடம்பெற்றது.