சற்று முன்னர் மருதமுனை பிரதான வீதியில் விபத்து -ஒருவர் உயிரிழப்பு

கதிர்காமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்வண்டி மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே மரணம்.

விபத்தில் மரணம் அடைந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திரு ஜெகிருஷ்னா என்றும் அறிய முடிகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.