போரதீவுப்பற்றில் அதிகரிக்கும் யானையின் தாக்குதல் -ஐந்து வீடுகள் சேதம்(PHOTOS)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக யானையின் தாக்குதல்கள் அதிகரித்துச்செல்வதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்ற பிரதேசத்தின் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளிலேயே யானையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

கடந்த மூன்று தினங்களில் செல்வாபுரம்,39ஆம் கொலணி உட்பட அதனை அண்டிய பகுதிகளில் ஐந்து வீடுகள் யானையின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.