தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலமொன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் இடம் பெற்றது.
தேசிய தாய் பால் விழிப்புணர்வு வாரத்தினையொட்டி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகம் சர்வோதய அமைப்பின் உதவியுடன் இந்த தாய்பால் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடாத்தியது.
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரினுடாக சென்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தை அடைந்து அங்கு விழிப்புணர்வு கூட்டமொன்றும் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் மற்றும் சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சர்வோதய அமைப்பின் உத்தியோகத்தர்கள் அதன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்த பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.