வரலாற்றுச் சிறப்பு மிக்க, மன்னம்பிட்டி- தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாதந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
28 ஆம் ஞாயிற்றுக்கிழமை உற்சவம் ஆரம்பமாகி நேற்று செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை நாளில் தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
ஊற்சவ நாடகளில் சிறப்பு விழாக்களான மயில்கட்டுத் திருவிழா மன்னம்பிட்டி கிராம மக்களால் இம்மாதம் 31ஆம்திகதியும், பந்தற்காட்சி மற்றுமு; வேட்டைத்திருவிழா முதலி குடும்பத்தினரால் ஆகஸ்ட் 05ஆம்திகதியும் கறுப்பளை,சொறிவில், சவன்பிட்டி, மன்னம்பிட்டி கிராம மக்கள் இணைந்து ஏனைய நாட்களிலும் திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு.கு.விஜயநாதகுருக்கள், மஹோற்சவ குருவாக கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வ.கு.சிவானந்தம் குருக்கள் கிரியைகளை மேற்கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரியங்களைக்கொண்ட மிகவும் பழமையான ஆலயமாக மன்னம்பிட்டி- தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் உள்ளது.