மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேற்றைய தினம் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் நேரில் சென்று பார்வையிட்டு மக்களது நிலைமை குறித்தும் கலந்துரையாடினார்.
இதே நேரம், பாதிக்கப்பட்ட வீடுகளை பதுளை வீதியிலுள்ள தும்பாலஞ்சோலை இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினர் திருத்தும் வேலைகளில் ஈடுபட்டனர்.
முழு அளவிலும், பகுதியளவிலும், 63 வீடுகள் சேதமடைந்தன. இவை யாவும் நேற்றைய தினம் இராணுவத்தினரால் திருத்திக் கொடுக்கப்பட்டதாக தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை வீசிய சுழல் காற்று காரணமாக கரடியானாறு பிரதேசத்தில் 10 வீடுகள் முழுமையாகவும் 7 வீடுகள் பகுதியளவிலும், மரப்பாலம் பிரதேசத்தில் 5 வீடுகள் முழுமையாகவும் 37 வீடுகள் பகுதியளவிலும் , கித்துள் பிரதேசத்தில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.
சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் யுத்த காலத்தில் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டு, இறுதி யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீளக் குடியேற்ற்பட்ட மக்களைக் கொண்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.