ஊறணியில் கஞ்சா விற்ற மீன் வியாபாரி கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் இருந்து ஒரு தொகை கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சைக்களின் பின்புறம் பெட்டியை கட்டிக்கொண்டு மீன்களை விற்ற நடமாடும் மீன் வியாபாரியையே கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீன்கள் விற்கும் வியாபாரி போல் சைக்களின் பின்புறம் பெட்டியை கட்டிக்கொண்டு கஞ்சாக் கட்டுக்களையே இவர் விற்பனை செய்துள்ளார்.

இது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து மட்டக்களப்பு பொலிஸார் நடத்திய தேடுதலில் ஊறணி சந்தி;ப்பகுதியில் வைத்து 25 கஞ்சா கட்டுக்களைக்கொண்ட சுமார் 56 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் ஏறாவூரைச் சேர்ந்தவராவர். குறித்த சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவரை போன்றே இன்னும் பலர் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.