திறந்த பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கற்கைகள் நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிக்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய கற்கைகள் நிலையில் நடைபெற்றுவரும் 11 கற்கைகளில் பூர்த்திசெய்த மாணவர்க்கே இந்த சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டன.
திறந்த பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கற்கைகள் நிலையத்தின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞான பீடத்தின் தலைவருமான எஸ்.எஸ்.இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஜி.எப்.இராஜரெட்னம் கலந்துகொண்டார்.
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிறப்பான முறையில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளை நிறைவுசெய்த 180பேருக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் விரிவுரையாளர்கள்,மாணவர்கள்,பெற்றோர் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.