கிழக்கு மதுபோதைக்கு அடிமையானவர்களை அதில் இருந்து மீட்பு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை ஒரு அரசசார்பற்ற நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது.
மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் மனித நேய ஒன்றியத்தின் விமோச்சனா இல்லமே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இதன் பணிகள் முன்னெடுக்கப்ப்டுவருகின்றன.
இதன் கீழ் விமோச்சனா இல்லம் மூலம் மதுபாவனையில் இருந்துமீட்கப்பட்ட 36பேரை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
விமோச்சனா அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் திருமதி செல்விக்கா சகாதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மனித நேய ஒன்றியத்தின் ஸ்தாபகர் ஜோர்ஜ் ஹோர்த் கலந்துகொண்டார்.
மதுபாவனையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களின் மன நிலை தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் விமோசனா சிறுவர் தினம் இதன்போது அனுஸ்டிக்கப்பட்டது.
விசேடமாக சிறுவர் கதைகளின் தந்தையென வர்ணிக்கப்படும் மாஸ்டர் சிவலிங்கத்தின் கதை கூறும் நிகழ்வு இதன்போது இடம்பெற்றது.
அத்துடன் சிறுவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.