மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலத்தில் நடைபெற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் வைபவம் கடந்த செவ்வாய்க் கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் வ.முருகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் லண்டனிலிருந்து வருகை தந்திருந்த கொடையாளர் ஏ.மரியதாஸால் பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மண்முனைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.