மட்டு.போதனா வைத்தியசாலை பெண் சிற்றூழியர் மீது தாக்குதல் முயற்சி -இருவர் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சிற்றூழியர் ஒருவரை கடுமையான வார்த்தைகளினால் ஏசி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன் அவரை புகைப்படம் எடுத்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் இன்று இரவு 7 மணியளவில் வைத்தியசாலைக்கு வந்த இருவரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் பெண் ஊழியருக்கு எதிராக நடவடிக்கையை கண்டித்து வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக இன்றிரவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.