மட்டக்களப்பு மாநகரசபை தொடர்பில் ஆராயும் கூட்டம்

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளின்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் செற்பாடுகள் மக்களுக்கு சென்றடையும் விதம் தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் இடம்பெற்றது.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் துஸால் விதானகே,திட்ட அலுவலர் ருக்மல் சில்வா,மாநகர ஆணையாளர் சிவநாதன்,மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராசா உட்பட மாநகரசபை உத்தியோகத்தர்கள்,சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையில் மக்கள் பயனை பெறும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகளும் மாநகரசபையின் செயற்பாடுகளின்போது சேவை வழங்கும்போது மாநகரசபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாநகரசபையும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

இதன்போது மாநகரசபையின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றி அதன் மூலம் பொதுமக்கள் உச்சப்பயணை பெற்றுக்கொள்ளும் வகைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்த காலங்களில் பாதிக்கப்படும் பகுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.நடைபெற்றுவரும் நகர் அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்கள் மாநகரசபைக்கு வந்து சேவைகளை பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும் சில நிர்வாக ரீதியான பிரச்சினைகளையும் தீர்ப்பது தொடர்பில் ஆராயப்பட்டன.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை உரிய தரப்பினருக்கு கொண்டுசென்று நிவர்த்திசெய்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

காலை9.00மணி தொடக்கம் பிற்பகல் 3.00மணி வரை இந்த கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.