லேடி மெனிங் றைவை அழகுபடுத்துவோம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் சிரமதானம்

( பா. சிவம், சசி ஜதாட்சன்)

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிசாரும் லேடிமெனிங் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாநகரசபை சுத்திகரிப்பு ஊழியர்கள் இணைந்து நடாத்திய சிரமதானப்பணி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

லேடி மெனிங் றைவை அழகுபடுத்துவோம் எனும் தலைப்பில் கல்லடிப்பாலத்திலிருந்து கோட்டைமுனைப்பாலம் வரையுள்ள 1 . 2 கி;.மீ நீளமான ஆற்றங்கரைப் பிரதேசம் சிரமதானப்பணியில் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 302 பேர் பங்கேற்றனர்.

கிழக்குப்பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹக்மன , வாழைச்சேனை  உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ண,   தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனர்த்த முகாமைத்தவ நிலைய மற்றும் மாநகரசபையின் கனரக வாகனங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன.