உல்லாச பயணிகளை கவரும் இடமாக மாற்றம்பெற்றுவரும் கல்லடி பாலம்

( பா. சிவம் )

புதிய கல்லடிப் பாலத்தின் இரு முனைகளும் வெள்ள காலங்களில் நீர் வடிந்தோடுவதற்கு வசதியாக வடிகான்கள் அமைக்கும் பணிகளில் நிர்மாணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இருமுனைகளிலும் மண்ணரிப்பை தடைசெய்யும் நோக்கோடும் மற்றும் அழகுபடுத்தும் நோக்கோடும் பச்சையான புற்களை இட்டுவருகின்றனர்.

கல்லடி புதிய மற்றும் பழைய பாலங்கள் உள்ழூர் மற்றும் வெளியூர் உல்லாசப் பிரையாணிகளைக் கவரும் இடமாகவும் பொழுது போக்கும் இடமாகவும்  மாற்றம்பெற்று வருகின்றது.

தினமும் ஆயிரக்கணக்கான உள்ழூர் உல்லாசப்பிரையாணிகள் வருகை தருவதனால் கடல், வாவி ஓட்டு ( செல் பூட் ) உணவுப்பொருட்களுக்கு தற்பொழுது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பிற்கு பெரிய பஸ் வண்டிகளில் வருகை தரும் அதிகளவான சிங்கள உல்லாசப் பிரயாணிகள் மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் தங்குவது குறிப்பிடத்தக்கது.