தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு கபடி அணிக்கு மாபெரும் கௌரவிப்பு

(சசி ஜதாட்சன்)

25வது யுத் ஸ்ரீலங்கா தேசிய விளையாட்டுப்போட்டியின் கபடிப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட கபடி அணி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் கபடி அணி வீரர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.என்.நைரூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தவராசா,வேல்ட் விசன் அமைப்பின் ஏறாவூர் பற்று நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ரவீந்திரன்,சர்வோதய அமைப்பின் இணைப்பாளர் ரி.மதனகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கபடி வீரர்கள் அழைத்துவரப்பட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது சாதனை படைத்த வீரர்கள் நினைவுச்சின்னங்கள் மற்றும் மேலங்கிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த சாதனையாளர்களை மட்டக்களப்பில் உள்ள அமைப்புகள் இதுவரை கௌரவிக்காமை தொடர்பில் அண்மைக்காலமாக கவலை தெரிவிக்கப்பட்டுவருகின்றது.