கிழக்கு பல்கலையின் சௌக்கிய பீடத்தின் பீடாதிபதியாக டாக்டர் சுந்தரேசன் நியமனம்

(கிருஸ்ணா)

கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பதிய பீடாதிபதியாக டாக்டர் தட்சணாமூர்த்தி சுந்தரேசன் நியமிக்கப்பட்டுள்னார்.

இவர் கடந்த 28ஆம்திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

டாக்டர் தட்சணாமூர்த்தி சுந்தரேசன் மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலையின் பழைய மாணவராவார். களனி பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் மருத்துவக் கற்கையை நிறைவு செய்த இவர், 199களில், ராகம வைத்தியசாலையில் தனது பயிற்சிகளை நிறைவு செய்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில், நரம்பியல் பிரிவில் வைத்தியராக 2000களில் இணைந்து கொண்டார்.

பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறு நீரக மாற்றுப்பிரிவில், இலங்கையில் சிறுநீரக நோய் தொடர்பான பிரபல வைத்திய நிபுணரான பேராசிரியர் றி~;வி செரிப்ன் கீழ் அவரது பட்ட மேற்கற்கையை மேற்கொண்டார்.  பின்னர் மேற்படிப்புக்கான அவுஸ்திரேலியாவில், பொது வைத்தியத்துறையில் கற்று அக்கற்கைக்காக தங்கப்பதக்கம் வென்றவராவார்.

2008ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் பொது வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் தட்சணாமூர்த்தி சுந்தரேசன்2008ஆம்ஆண்டு பகுதிநேர விரீவுரையாளராகக் கடமையாற்றி,  2010ஆம் ஆண்டுமுதல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் கிளினிக்கல் பிரிவின் இணைப்பாளராகவும், 2011ஆம்ஆண்டு முதல் மருத்துவப்பிரிவுக்கு பதில் தலைவராகவும் கடமையாற்றினார்.

வைத்திய நிபுணரான சுந்தரேசன் வைத்தியத்துறைசார் பல்வேறு கற்கைகளையும் மேற்கொண்டுள்ளதுடன், பலவேறு பதவிகளிலும் வகித்து வருகிறார்.

இவர், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் குமாரசாமி தட்சணாமூர்த்தியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் குமாரசாமி தட்சணாமூர்த்தி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.