மாங்கம் சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் நவநாட்கள் ஆரம்பமாகியது.
இன்றைய திருப்பலியை அருட்பணி எல் .ஜெயகாந்தன் அடிகளார் ஒப்பு கொடுத்தார். . தினமும் மாலை 05.30 மணிக்கு ,திருச்செபமாலை ,சதா சகாய அன்னை மன்றாட்டுக்களுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
நவநாட் காலங்களில் ஒப்புரவு அருட்ச்சாதனம் (பாவசங்கீர்த்தனம் ) வழங்கப்படும் .
அத்தோடு நவநாட் காலங்களில் அன்னையின் திரு உருவத்தை அழகாக அலங்கரிக்கப்படும் வட்டார மக்களை குலுக்கல் முறையில் தெரிவு செய்து திருவிழா அன்று பரிசுகளும் வழங்கப்படும்.